இந்தியா

நாட்டில் ஜெ.என்.1 கரோனா பாதிப்பு 511 ஆக உயர்வு! 

DIN

இந்தியாவில் ஜெ.என்.1 கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 511 ஆக உயர்ந்துள்ளதாக நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனாவின் புதிய திரிபான ‘ஜெஎன்.1’ தொற்று பரவி வருகிறது. இந்தியாவிலும் இப்புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் வெளியிட்ட தகவலில், 

கேரளத்தில் முதல்முறையாக அண்மையில் கண்டறியப்பட்ட புதிய வகை ஜெஎன்.1 புதிய துணைத் திரிபு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி 2 நிலவரப்படி கர்நாடகத்தில் 199, கேரளத்தில் 148, கோவாவில் 47, குஜராத்தில் 36, மகாராஷ்டிரத்தில் 32 பேர் என 11 மாநிலங்களில் மொத்தம் 511 பேருக்கு தொற்று பரவியுள்ளது. 

தில்லியில் 15, ராஜஸ்தானில் 4, தெலங்கானத்தில் 2, ஒடிசா, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்ப்டடுள்ளனர். 

தமிழகத்தில் மட்டும் ஜெ.என்.1 கரோனாவுக்கு இதுவரை 26 பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT