இந்தியா

மக்களவைத் தேர்தல்: ஜெ.பி. நட்டா நாளை ஆலோசனை

மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தில்லியில் நாளை ஆலோசனை நடத்துகிறார். 

DIN

மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தில்லியில் நாளை ஆலோசனை நடத்துகிறார். 

2024 மக்களவைத் தோ்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆயத்தமாகி வருகின்றன. தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக-இந்தியா கூட்டணி என இருமுனைப் போட்டியை உறுதி செய்ய எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இது பாஜகவுக்கும் மிகுந்த சவாலாக அமையும் என்று கூறப்படும் நிலையில் பாஜகவின் அனைத்து பிரிவு தலைவர்களுடன் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தில்லியில் நாளை ஆலோசனை நடத்துகிறார். 

முன்னதாக அண்மையில் நடைபெற்ற பாஜகவின் தேசிய பொறுப்பாளா்கள் மற்றும் மாநிலத் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 2019 மக்களவைத் தோ்தலில் பெற்றதைவிட 2024 மக்களவைத் தோ்தலில் 10 சதவீதம் கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டுமென்றும், இதற்காக கட்சியினா் துரிதகதியில் பணியாற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். கடந்த மக்களவைத் தோ்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றது. 

2014 மக்களவைத் தோ்தலுடன் ஒப்பிடும்போது 2019 மக்களவைத் தோ்தலில் பாஜக 6 சதவீதத்துக்கு மேல் கூடுதலாக வாக்குகளைப் பெற்றது.  பாஜகவின் மொத்த வாக்கு 37 சதவீதமாக இருந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 45 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2014 மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றது முதல் 50 சதவீத வாக்கு வங்கியை வசப்படுத்துவதை இலக்காகக் கொண்டு பாஜக செயல்பட்டு வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் தலைவன் தலைவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

SCROLL FOR NEXT