முகப்பு
இந்தியா

ராமர் கோயில் அழைப்பு குறித்து விரைவில் முடிவு: மல்லிகார்ஜுன் கார்கே

அயோத்தி ராமர் கோயிலில் நடக்கவிருக்கும் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் கலந்துகொள்வது குறித்து விரைவில் முடிவெடுப்பதாக மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:23 PM
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே
பகிர்:

அயோத்தி ராமர் கோயிலின் சிலை பிரதிஷ்டை நிகழ்வுக்கு செல்வது குறித்து விரைவில் முடிவெடுக்கவுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். 

மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சோனியா காந்தி ஆகியோருக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்புவிடப்பட்டிருந்தது. அழைப்பு குறித்த முடிவுகளை சரியான நேரத்தில் எடுப்போம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய மல்லிகார்ஜுன் 'பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் முதன்மை செயலாளர் மற்றும் கோயில் அறக்கட்டளை செயலாளர் என்னை சந்தித்து, நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். நிகழ்வில் கலந்துகொள்வது குறித்து விரைவில் முடிவெடுப்பேன்' எனத் தெரிவித்துள்ளார். 

வரும் ஜனவரி 22 ஆம் நாள் ராமர் கோயிலின் சிலைப் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட 6,000 க்கும் அதிகாமானோர் கலந்துகொள்ளவுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →