இந்தியா

ஜன.9-ல் ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் அமித்ஷா

வரும் 9 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீருக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

DIN

புது தில்லி: வரும் 9 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீருக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த 2 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் காவலர்களிடையே ஒருங்கிணைப்பை அதிகரிப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், வரும் 9 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு அமித் ஷா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த பயணத்தின் போது ஜம்மு-காஷ்மீரின் விரிவான வளர்ச்சியை மதிப்பிடுவதற்கான முக்கியமான ஆய்வுக் கூட்டங்கள், பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கான பணி நியமனக் கடிதங்களையும், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை தொடங்கி வைக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT