இந்தியா

கடும் குளிர்: தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு

DIN

கடும் குளிர் காரணமாக திரையில் பள்ளிகளுக்கு ஜனவரி 10ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தில்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா உள்பட வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும், காலை வேளைகளில் அடா் மூடுபனி நிலவி வருகிறது. இதனால் வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குளிர்கால விடுமுறைக்குப் பிறகு தில்லியில் பள்ளிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு கடும் குளிர் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை ஜனவரி 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி கல்வி அமைச்சர் அதிஷி தனது எக்ஸ் பதவில், குளிர் காலநிலை காரணமாக நர்சரி முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அடுத்த 5 நாள்களுக்கு மூடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தலைநகர் தில்லியில் அடுத்த சில நாள்களுக்கு அடர்த்தியான மூடுபனி, குறைந்த வெப்பநிலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் வீசுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

கெங்கவல்லி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

தில்லி பாஜக அலுவலகத்தில் தீ!

SCROLL FOR NEXT