வேட்புமனு தாக்கல் செய்த ஸ்வாதி மாலிவால் 
இந்தியா

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு ஆத் ஆத்மி வேட்பாளர்கள் ஸ்வாதி மலிவால், என்.டி.குப்தா, சஞ்சய் சிங் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

DIN

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு ஆத் ஆத்மி வேட்பாளர்கள் ஸ்வாதி மலிவால், என்.டி.குப்தா, சஞ்சய் சிங் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

தில்லியைச் சேர்ந்த 3 மாநிலங்களவை எம்பி.க்களான சஞ்சய் சிங், சுஷில் குமார் குப்தா மற்றும் என்.டி.குப்தா ஆகியோரின் ஆறு ஆண்டு பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஜனவரி 19-ம் தேதி நடைபெறுகிறது. 

வேட்புமனு தாக்கல் செய்த என்.டி.குப்தா

அதன்படி, சஞ்சய் சிங், குப்தா ஆகியோர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர். அதேசமயம் சுஷில் குமார் குப்தா ஹரியாணாவில்  முழு கவனத்தையும் செலுத்திவரும் நிலையில், சுவாதி மாலிவாலின் பெயர் அக்கட்சியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மாலிவால், என்.டி.குப்தா, சஞ்சய் சிங் ஆகியோர் சிவில் லைன்ஸில் உள்ள தில்லி போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 

வேட்புமனு தாக்கல் செய்த சஞ்சய் சிங்

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜனவரி 9ம் தேதியும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 10-ம் தேதியும், வேட்புமனுக்களைத் திரும்பப்பெற ஜனவரி 12 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளிக்கிழமை ஆம் ஆத்மி மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டதையடுத்து,  மகளிர் ஆணையத் தலைவர் பதவியை மாலிவால் ராஜிநாமா செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT