இந்தியா

அனைவருக்குமான கோவா இலக்கை இந்தத் திட்டம் நிறைவு செய்யும்: பிரமோத் சாவந்த்

DIN

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மாற்று திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களை இலவசமாக வழங்கும் பிரதம மந்திரியின் திவ்யன்ஷா திட்ட மையத்தின் கோவா பிரிவைத் தொடங்கி வைத்தார்.

மாற்று திறனாளிகள் தனித்து வாழ உதவி புரியும் நவீன கருவிகளை இந்த மையம் வழங்கவுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். மத்திய அரசின் சமூக நலத்துறை இந்த மையங்களை நிர்வகிக்கிறது. 

அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்துக்கான படியை இந்த முன்னெடுப்பு தொடங்கி வைப்பதாகவும் மாற்று திறனாளிகளுக்கு வேண்டிய நவீன உதவி உபகரணங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட்: காங். அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேற்கு வங்கத்தில் பாஜக அலை வீசுமா? நட்சத்திர வேட்பாளர்களிடையே போட்டி

பேல் பூரி

மும்பை இந்தியன்ஸின் வெற்றியை கடினமாக்கிய வருண் சக்கரவர்த்தி: ஆஸி. முன்னாள் வீரர்

என்ன பார்வை?

SCROLL FOR NEXT