முகப்பு
இந்தியா

2 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட நபர் கைது!

போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:21 PM
பகிர்:

ஜம்மு காஷ்மீரில் 2.24 கிலோகிராம் அளவுள்ள கஞ்சாவை வைத்திருந்த நபர் அந்த மாநிலத்தின் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜவேத் அஹமது, மெல்ஹுரா பகுதியைச் சேர்ந்த இவர் தனியார் வாகனத்தில் ரேஸியில் இருந்து பாம்பியா பகுதிக்கு செல்லும்வழியில் காவலர்களால் இடைமறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டார்.

சோள உறைகளுக்குள் கஞ்சா உருண்டைகள் வைக்கப்பட்டு காரின் ஜன்னல் கதவுகளில் அவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் காவலர்கள் கண்டறிந்துள்ளனர்.

அந்த நபர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →