அந்தமான் நிகோபார் தீவுகளில் புதன்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘அந்தமானில் புதன்கிழமை காலை 7.53 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. கடல் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம்கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவு கோலில் 4.1-ஆகப் பதிவானது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | சார்மினார் எக்ஸ்பிரஸ் விபத்து: பயணிகள் காயம்
அந்தமான் நிகோபார் தீவுகளில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் வரவில்லை.
இது பொதுவாக நிகழும் சிறிய அளவிலான நிலநடுக்கம். ரிக்டா் அளவு கோலில் 6 புள்ளிகளுக்கு மேல் அதிா்வு பதிவாகும்போதுதான் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.