கோப்புப்படம். 
இந்தியா

உயிரைப் பறித்த கிரிக்கெட் ஆட்டம்!

மும்பையில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் 52 வயதான நபர் உயிரிழந்துள்ளார். 

DIN

மும்பையில் உள்ள தட்கார் கிரிக்கெட் மைதானத்தில் பந்து தலையில் மோதியதால் 52 வயதான நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த மைதானத்தில் இரண்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் ஒரு போட்டியில் விளையாடிய ஜயேஷ் சுனிலை சாவ்லா பீல்டிங்கில் ஈடுபட்டுள்ளார். 

அந்த நேரத்தில் மற்றொரு கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்பட்ட பந்து இவரது பின் தலையில் பலமாக மோதியுள்ளது. அந்த இடத்திலேயே மயக்கமடைந்து கீழே விழுந்தவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். 

மருத்துவமனையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். தலையில் ஏற்பட்ட பலத்த அடியால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

அந்த மைதானத்தில் நடைபெற்ற இரண்டு கிரிக்கெட் போட்டிகளும் குட்சி சமூகத்தினரால் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT