இந்தியா

வேலை வாங்கி தருவதாக பண மோசடி: 3 பேர் கைது

உள்ளூர் நாளிதழ்களில் வெளிவந்த விளம்பரத்தின் அடிப்படையில் பொருளாதார குற்றப் பிரிவு விசாரணை மேற்கொண்டது. 

DIN

புவனேஷ்வர்: ஒடிசா அரசின் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு, இந்தியளவில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்து வந்த கும்பலைச் சேர்ந்த மூவரைக் கைது செய்துள்ளது.

ஒடிசா மட்டுமில்லாது ஜம்மு- காஷ்மீர், குஜராத், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் இந்தk கும்பல் பலரை ஏமாற்றியுள்ளது.

மும்பை, தில்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் முதன்மையாக செயல்பட்டு வந்த கும்பல், கடந்து சில மாதங்களாக ஒடிசாவில் வாடகை இடத்தில் அலுவலகத்தைச் செயல்படுத்தி வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் ஒடிசாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நாளிதழ்களில் வெளிவந்த விளம்பரத்தின் அடிப்படையில் பொருளாதார குற்றப் பிரிவு விசாரணை மேற்கொண்டது. 

விளம்பரம் வழியாக மக்களை ஈர்த்து ஒடிசா பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு ஆள்களை எடுப்பதாக பண மோசடியில் இந்தக் கும்பல் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”நல்லவர்கள் எல்லாம் எங்கள் பக்கம்!” OPS குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்!

நியூசி.க்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?

செங்காத்தக்குளத்தில் அறிவுசார் நகரம்!அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அஜீத் பவார் உடல் அரசு மரியாதையுடன் தகனம்! லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

மெட்ரோ ரயிலில் வித் லவ் பட விளம்பரம்! ரசிகர்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT