முகப்பு
இந்தியா

தில்லியில் கடும் மூடுபனியால் ரயில் சேவைகள் பாதிப்பு!

தில்லியில் நிலவிவரும் கடும் மூடுபனியால் 24 ரயில்கள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:21 PM
கோப்புப்படம்.
பகிர்:

தில்லியில் தொடர்ந்துவரும் அடர்ந்த மூடுபனியால் ஏறத்தாழ 24 ரயில்கள் தாமதமாக தில்லியை வந்தடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு ரயில்வே அளித்த தகவலின்படி 4 ரயில்கள் 4 மணிநேரம் தாமதமாகியுள்ளது. மேலும் 4 ரயில்கள் 2.15 மணிநேரம் தாமதமாகியுள்ளது. அஜ்மீர் கத்ரா பூஜா எக்ஸ்பிரஸ் 6 மணிநேரம் தாமதமாகியுள்ளது. 

ஏறத்தாழ 13 ரயில்கள் 1 முதல் 1.15 மணிநேரம் தாமதமாகியிருப்பதாக ரயில்வே தெரிவிக்கிறது. சஹர்சா - தில்லி வைஷாலி எக்ஸ்பிரஸ் மற்றும் அம்பேத்கர் நகர் - காட்ரா எக்ஸ்பிரஸ் 3.15 மணிநேரம் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் 3 முதல் 4 நாள்களுக்கு வடமேற்கு இந்தியாவில் அதிகாலையில் அடர்ந்த பனிமூட்டங்கள் காணப்படும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் மிக மிக கடுமையான குளிர் இன்றுமுதல் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முழு கட்டுரையைப் படிக்க →