இந்தியா

150-வது ஆண்டை நோக்கி இந்திய வானிலை ஆய்வு மையம்; கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு!

DIN

இந்திய வானிலை ஆய்வு மையம் தொடங்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு செய்யவுள்ளதையடுத்து  இந்த நிகழ்வு நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 15 உடன் 150  ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், வருகிற ஜனவரி 15 முதல் இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. 

இது தொடர்பாக புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் தெரிவித்திருப்பதாவது: 150 ஆண்டுகள் என்ற மைல் கல்லை இந்திய வானிலை ஆய்வு மையம் எட்டவுள்ளது. அதனை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் வருகிற ஜனவரி 15 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15 வரை பல்வேறு விதமாக கொண்டாட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளன. அடுத்தாண்டு ஜனவரி 15 ஆம் தேதிக்குப் பிறகும் சில கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 1875 ஆம் ஆண்டு கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...முக்கிய அறிவிப்பு!

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று அமோகமான நாள்!

SCROLL FOR NEXT