முகப்பு
இந்தியா

காட்டிற்குள் விறகு வெட்டச் சென்றவர்கள் சடலமாக மீட்பு!

மணிப்பூரில் விறகு வெட்டுவதற்காக காட்டிற்குள் சென்ற 4 பேரில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

Updated On : 11 ஜனவரி, 2024 at 1:11 PM
கோப்புப்படம்.
பகிர்:

மணிப்பூரில் சுரசந்த்பூர் மாவட்டத்தில் விறகு வெட்டுவதற்காக மலைப்பகுதிகளுக்கு சென்ற நான்கு பேரில் மூன்று பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். 

கடந்த புதன்கிழமை பிஷ்னுபூர் மாவட்டத்தில் அக்கசோய் பக்தியைச் சேர்ந்த நான்கு பேர் விறகு வெட்டுவதற்காக அருகில் உள்ள மலைப்பகுதிக்குச் சென்றனர். அப்போது தொலைந்துபோன அவர்களில் மூன்று பேரின் சடலம் வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இபோம்சா சிங், அவரது மகன் ஆனந்த் சிங், ரோமன் சிங் ஆகியோர் ஹைடாக் பாலியேன் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தாரா சிங் எனும் மற்றொரு நபர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மூவரும் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.