இந்தியா

லாரியிலிருந்து ரூ.2.38 கோடி மதிப்புள்ள துணிகள் கொள்ளை: 2 பேர் கைது

DIN

ஜெய்ப்பூர்: உதய்பூரிலிருந்து ரூ.2.38 கோடி மதிப்புள்ள ஏற்றுமதிக்கான துணிகளை இரண்டு பேர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டி ஓபேரி சுங்கச்சாவடி அருகே இந்த கொள்ளையை நடத்திவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை கைது செய்ததாக ராஜஸ்தான் காவல்துறையினர் இன்று தெரிவித்தனர்.

இது குறித்து உதய்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் புவன் பூஷண் யாதவ் தெரிவித்ததாவது:

நேற்று முன்தினம் இரவு நொய்டாவிலிருந்து நவி மும்பையின் துரோணகிரிக்கு ஏற்றுமதி செய்வதற்கான ரூ.2.38 கோடி மதிப்புள்ள துணிகளை ஏற்றிக்கொண்டு லாரியில் உதவியாளருடன் புறப்பட்டதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளதாக தெரிவித்த காவல் துறை கண்காணிப்பாளர், நேற்று (வியாழக்கிழமை) மாலை கண்டி ஓபேரி சுங்கச்சாவடி அருகே லாரியின் முன் பைக்கை நிறுத்திய 2 பேர், ஓட்டுநர் மற்றும் உதவியாளரை கட்டையால் மிரட்டி கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த நிலையில், காவல்துறையின் சிறப்பு குழு குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ததாக தெரிவித்த புவன் பூஷண் யாதவ், அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னரிலிருந்து சீல் வைக்கப்பட்ட நிலையில் துணிகளும், கொள்ளைக்கு பயன்படுத்திய பைக்கையும் மீட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT