முகப்பு
இந்தியா

பக்தர்கள் வேறு நாள்களில் கூட ராமர் கோயில் செல்லலாம்: மல்லிகார்ஜுன் கார்கே

உண்மையான பக்தர்கள் ஜனவரி 22 மட்டுமல்ல, வேறு நாள்களில் கூட ராமர் கோயிலுக்குச் செல்லலாம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:20 PM
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே
பகிர்:

ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பை மறுத்த காங்கிரஸ், பாஜக-வின் தொடர் அரசியல் தாக்குதல்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஒரு 'இந்து எதிர்ப்பாளர்' 'ராமர் மறுப்பாளர்கள்' என்பது போன்ற கருத்துக்களை பரப்பிவருகிறது. இதனை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

'பாஜக ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பிவருகிறது. உண்மையான பக்தியுள்ளவர்கள் ராமர் கோயிலுக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்' என கார்கே தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு ராமர் கோயில் மூலம் அரசியல் ஆதாயம் காண முயல்கிறது என்பதால் ராமர் கோயில் திறப்பு விழாவில் காங்கிரஸ் பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

'காங்கிரஸ் எந்த மதத்தையும் புண்படுத்தியதில்லை. பாஜக - வின் இந்த தந்திரத்தில் காங்கிரஸ் சிக்காது.  தொடர்ந்து நாட்டின் பிரச்னைகளுக்காக காங்கிரஸ் குரல் எழுப்பும்' எனவும் அவர் தெரிவித்தார். 

'இங்கு இது பிரச்னையல்ல, எங்களுடையே ஒரே பிரச்னை கடந்த ஆட்சி காலங்களில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக என்ன செய்தார்? அவரின் வெளியுறவுக்கொள்கைகள் என்ன? வேலையில்லாத் திண்டாட்டம், எல்லை பிரச்னைகள், சீன ஊடுருவல்கள் குறித்து அவர் என்ன செய்துள்ளார்?' எனக் கேள்வியெழுப்பியுள்ளார். 

மேலும், 'ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் பல கொடுமைகளை அனுபவிக்கிறார்கள், அழிக்கப்படுகிறார்கள். நாங்கள் அதைப்பற்றி கவலை கொள்கிறோம். ராமர் கோயில் பிரச்னைகளைப் பேசுவதைவிட இதைப்பற்றி பிரதமரிடம் கேட்கிறோம்' எனக் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →