நாட்டின் மிகப்பெரிய கடல் பாலம்: பிரதமர் மோடி திறந்துவைத்தார்!
மகாராஷ்டிரத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவா ஷேவா அடல் சேது எனப் பெயரிடப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
மகாராஷ்டிரத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவா ஷேவா அடல் சேது எனப் பெயரிடப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது இந்தியாவில் கட்டப்பட்ட மிக நீளமான கடல் பாலமாகும். கடந்த 2016 டிசம்பரில் பிரதமர் மோடியால் பாலத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.
Advertisement
Advertisement
கடல் பாலம் மொத்தம் ரூ.17,840 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த பாலத்தின் மொத்த நீளம் 22 கி.மீ. இதில் கடலுக்கு நடுவே 16.5 கி.மீ தொலைவிற்கு பாலம் அமைந்துள்ளது.
இப்பாலம் மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான பயணத்தை வழங்கும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.
இதையும் படிக்க: வட இந்தியாவில் அடுத்த 5 நாள்களுக்கு கடும் பனிமூட்டம் நிலவும்!
மேலும், இப்பாலம் மும்பையிலிருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரத்தை குறைக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.