முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம்: அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பரபரப்பு நிலவியது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:20 PM
கோப்புப் படம்.
பகிர்:

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பரபரப்பு நிலவியது. 

மகாராஷ்டிர மாநிலம், டோம்பிவ்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை 11:00 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஏழாவது தளத்தில் ஏற்பட்ட தீ மளமளவென 18 வது மாடி வரை பரவியது.

கட்டடத்தில் வசித்து வந்த அனைவரும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீவிபத்தில் அதிருஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

மின்கசிவு காரணமாக அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →