முகப்பு
இந்தியா

பனியில் கண்ணுக்குத் தெரியாத ரயில், மாணவி பலி!

உத்தரப் பிரதேசத்தில் அடர்ந்த பனிமூட்டத்தால் கண்ணுக்குத் தெரியாத ரயில் மோதியதில் மாணவி ஒருவர் பலியாகியுள்ளார். 

Updated On : 13 ஜனவரி, 2024 at 3:45 PM
கோப்புப்படம்.
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் கடும் பனிமூட்டம் நிலவிவரும் நிலையில் போக்குவரத்து பெரும் பாதிப்படைந்துள்ளது. அடர்ந்த பனிமூட்டத்தால் பார்க்கும்திறன் மிகவும் குறைவாகவுள்ளது. 

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு வகுப்புக்கு சென்றுகொண்டிருந்த இரண்டு மாணவிகள் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளார். மற்றொருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்த கஜோல் மற்றும் காயம்பட்ட வர்ஷா ஆகியோர் அஜ்னார் ரயில் சந்திப்பில் தண்டவாளத்தைக் கடந்தபோது, அடர்ந்த பனியில் கண்ணுக்குத் தெரியாத ரயில் திடீரென அவர்களை மோதியதாகக் கூறப்படுகிறது. 

Advertisement

உயிரிழந்த கஜோலின் உடல் உடற்கூராய்வுக்கும், காயம்பட்ட வர்ஷா கான்பூர் மருத்துவக் கல்லூரிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக ஓரய் மருத்துவக் கல்லூரியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.