இந்தியா

காங்கிரஸின் நடைபயணம் துவங்குவதில் தாமதம்?

கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகள் பாதித்ததால் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மணிப்பூர் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

DIN

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தைத் துவங்க காங்கிரஸ் தலைவர்கள் பயணிக்கவிருந்த சிறப்பு இண்டிகோ விமானம் கடும் பனிமூட்டத்தின் காரணமாக தாமதமடைந்துள்ளது. தில்லியிலிருந்து மணிப்பூரிக்கு செல்லும் சிறப்பு விமானம் இன்று(ஞாயிறு) காலை கடும் பனிமூட்டத்தால் தாமதமாகியுள்ளது. 

ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் தில்லி விமான நிலையத்தில் காத்திருந்தனர். மணிப்பூரில் நண்பகலில் கொங்ஜம் போர் நினைவிடத்தில் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் துவங்கவிருந்தது.

மாலை இடைவேளை 5.30 மணியளவிலும், மணிப்பூரி இம்பாலில் உள்ள கால்பந்து மைதானத்தில் இரவு தங்குவதாகவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விமான தாமதத்தினால் அந்த திட்டங்களில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நடைபயணத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி 6,700 கிலோமீட்டர் தூரத்தை 67 நாள்களில் கடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 110 மாவட்டங்களில் வீடுவீடாக சென்று மக்களைச் சந்திக்கவிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

கூடலூரில் பூக்கத் தொடங்கிய குறிஞ்சி மலர்கள்!

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

SCROLL FOR NEXT