இந்தியா

தில்லியில் தரையிறங்காத 8 விமானங்கள்!

DIN

தில்லியில் நிலவிவருக் மோசமான வானிலையால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. கடுமையான பனியால் பார்க்கும் திறன் குறைவாகியிருப்பதால் விமானங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

தில்லியின் மோசமான வானிலையால் விமானங்கள் தரையிறக்கப்பட முடியாமல், வேறு இடங்களுக்கு வழி மாற்றப்படுகின்றன. 7 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், ஒரு விமானம் மும்பைக்கும் வழி மாற்றியனுப்பப்பட்டு அங்கு பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளன. 

ஆர்.கே. புரம் பகுதியில் அதிகாலை நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 7 டிகிரி செல்சியல் பதிவாகியுள்ளது.  இந்நிலையில் வீடில்லாமல் தெருக்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு இரவு தங்குவதற்கான இடங்களை அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அந்த தங்குமிடங்களில் கம்பளிகள், சுடுதண்ணீர் மற்றும் உணவு போன்றவை வழங்கப்பட்டுவருகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்! -திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக் கட்டுப்பாடு அமல்

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் காவல்துறையினர் சோதனை

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்கினீர்கள்? ராகுல்

அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

SCROLL FOR NEXT