இந்தியா

ராமர் சிலை பிரதிஷ்டை: எம்.எஸ்.தோனிக்கு அழைப்பு!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

DIN

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமா் சிலை வரும் 22-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

சிலை பிரதிஷ்டை நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இருக்கிறாா். மேலும் நாடு முழுவதும் இருந்து துறவிகள், அரசியல் பிரமுகா்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்பட 6,000 பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில செயலாளர் கரம்வீர் சிங், ஆர்.எஸ்.எஸ்.-இன் தனஞ்செய சிங் இந்த அழைப்பிதழை கொடுத்தனர்.  

ஏற்கனவே சச்சின், விராட் கோலி, ஹர்பஜன்சிங் ஆகிய வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT