இந்தியா

நாகாலாந்தை சென்றடைந்த ராகுல் காந்தியின் நடைப்பயணம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நீதி நடைப்பயணம் இன்று மாலை நாகாலாந்தை சென்றடைந்தது.

DIN


கோஹிமா: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் இன்று மாலை நாகாலாந்தை சென்றடைந்தது.

மணிப்பூர் எல்லையில் உள்ள கோஹிமா மாவட்டத்தில் உள்ள குசாமா கிராமத்திற்கு ராகுல் காந்தி தனது கட்சி உறுப்பினர்களுடன் வருகை தந்தார். இந்த யாத்திரையை மணிப்பூர் மாநிலம் தௌபாலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தனது பயணத்தின் போது, நாகா ஹோஹோ உள்ளிட்ட நாகா பழங்குடி அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் தேவாலய அமைப்புகளுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று மாநில காங்கிரஸ் செயல் தலைவர் க்ரிடி தியுனுவோ தெரிவித்தார்.

ஜனவரி 18ஆம் தேதியன்று அசாமில் நுழைவதற்கு முன்பு ராகுல் காந்தி மாநிலத்தின் குறைந்தது ஐந்து மாவட்டங்கள் வழியாக பயணிப்பார். நாளை (செவ்வாய்க்கிழமை), விஸ்வேமா கிராமத்திலிருந்து நாகாலாந்து யாத்திரையைத் தொடங்கும் அவர், தலைநகரை அடைந்ததும், இரண்டாம் உலகப் போர் கல்லறையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்.

இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் 15 மாநிலங்களில் உள்ள 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக செல்லும். இது 6,713 கி.மீ தூரம், பெரும்பாலும் பேருந்துகளில் மட்டுமல்லாமல் நடந்தே பயணித்து, மார்ச் 20 அல்லது 21 அன்று மும்பையில் முடிவடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கள்ளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

தளவாய் கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தொடக்கி வைப்பு

நஜாஃப்கரில் தூய்மைப் பணியில் அமைச்சா் ஆஷிஷ் சூட்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: இரு ஆசிரியா்கள் கைது

மத்திய கல்வி அமைச்சகம் முன் என்எஸ்யுஐ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT