இந்தியா

ம.பி.யில் சாலைத்தடுப்பில் கார் மோதியது: 4 பேர் பலி! 

மத்தியப் பிரதேசத்தின், ஷிவ்புரி மாவட்டத்தில் கார் சாலைத்தடுப்பில் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். 

DIN

மத்தியப் பிரதேசத்தின், ஷிவ்புரி மாவட்டத்தில் கார் சாலைத்தடுப்பில் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். 

திங்கள் இரவு மாவட்டத்தின் பதர்வாஸ் நகரின் புறவழிச்சாலையில் விபத்து நிகழ்ந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடும் மூடுபனி காரணமாக காண்புத்திறன் குறைபாட்டினால் கார் சாலைத்தடுப்பில் மோதியது. 

பலியானவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஒருவர் ஷிவ்புரி மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்தார், காயமடைந்தவர்கள் குணாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரி தெரிவித்தார்.

மேலும் விசாரணை நடந்து வருவதாக பதர்வாஸ் காவல் நிலைய பொறுப்பாளர் ரவி சௌகான் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனம் விபத்து! இருவர் பலி!

மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய தில்லி முதல்வர்!

நீதிபதி யஷ்வந்த் வா்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

இந்த ஆண்டின் கோரமான காட்டுத்தீ! 27,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்! | France

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை!

SCROLL FOR NEXT