இந்தியா

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு! ஏன்?

DIN


இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய ராணுவம் தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், ஒவ்வொரு குடியரசு தினத்தை முன்னிட்டும், 10 நாள்களுக்கு முன்பே, ஜம்மு- காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது வழக்கமான நடைமுறைதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாளை முன்னிட்டு இன்று முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், வரும் 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா நடைபெறவிருப்பதால், அசம்பாவிதங்களை தடுக்க எல்லையில் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பதற்றமான பகுதிகளை ராணுவத்தினர் கண்காணித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரிஸில் அஹானா கிருஷ்ணா!

வார பலன்கள்: 12 ராசிக்கும்..

உ.பி.யை நோக்கி 'இந்தியா' புயல்! மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்! ராகுல் பேச்சு

விழுப்புரத்தில் 94.11% தேர்ச்சி: மாநில அளவில் 6ம் இடம்!

வாழ்க்கை மிகப்பெரிய திரைச்சீலை...!

SCROLL FOR NEXT