ஆண்டனி பிளிங்கன் 
இந்தியா

மோடி தலைமையில் இந்தியா...: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

அமெரிக்கா -இந்தியாவுக்கு இடையிலான உறவு குறித்து அவர் பேசியுள்ளார்.

DIN

அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இந்தியாவை அபரிமிதமான வெற்றி பெற்ற நாடாக அமெரிக்கா கருதுவதாக தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான அரசு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியதாகவும் பல இந்தியர்களின் வாழ்வில் நேர்மறையாக தாக்கத்தை உண்டாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரின் முயற்சியால் அமெரிக்கா- இந்தியா உறவு நெருக்கமாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

அதே வேளையில் ஜனநாயகம் மற்றும் உரிமைகள் சார்ந்து இரு நாடுகளும் தொடர்ச்சியான உரையாடலில் உள்ளதாக அவர் கூறினார்.

வளர்ச்சி, மேம்பாடுக்கு இடையில் ஹிந்து தேசியவாதம் நாட்டில் மேலோங்கி வருவது குறித்து கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அதிபர் ஜோ பைடன் பதவிகாலத்தில் வெளியுறவு கொள்கையில் அடிப்படை உரிமைகள் சார்ந்தும் ஜனநாயகம் சார்ந்தும் கவனம் செலுத்த அமெரிக்கா விரும்பியதாகவும் அதன்படியே செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த கொள்கைகள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறாக மாறிவருவதையும் அந்த நாட்டுடன் அமெரிக்காவுக்கு இருக்கும் முந்தைய உறவின் அடிப்படையில் அமைவதாகவும் பிளிங்கன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காற்று மாசு அதிகரிப்பு: புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் தில்லி!

வீரர்கள் பலரும் எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட தயார்: திலக் வர்மா

பாகிஸ்தானுடன் தொடர்பு: அசாமில் ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி கைது

கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி பெண் வேட்பாளர்கள் வெற்றி!

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

SCROLL FOR NEXT