ராகுல் காந்தி (கோப்புப்படம்) 
இந்தியா

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா: ராகுல் காந்தி விமர்சனம்!

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த முதல்வராக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

DIN

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த முதல்வராக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அஸ்ஸாமின் சிவசாகர் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ஆளும் பாஜக மற்றும் அதன் சித்தாந்த அமைப்பான ஆர்எஸ்எஸ் வெறுப்பைப் பரப்பி பொதுப் பணத்தைக் கொள்ளையடித்து வருகின்றனர்.

இந்தியாவில் மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கம் அஸ்ஸாமில் உள்ளது. இங்கு என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அஸ்ஸாமின் பிரச்சினைகளை 'பாரத் ஜோடோ நியாய யாத்ரா'வின் போது எழுப்புவோம்.” என்று கூறினார்.

அதனையடுத்து ஜோர்ஹாட் மாவட்டத்தின் நாகாச்சாரியில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “அஸ்ஸாமில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த முதல்வராக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா திகழ்ந்து வருகிறார். மேலும் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் முழு குடும்பமும் ஊழலில் ஈடுபட்டுள்ளது என்றார்.

அஸ்ஸாம் மக்களை காசு கொடுத்து வாங்கலாம் என்று சர்மா நினைக்கிறார். ஆனால், அஸ்ஸாமிய மக்களை விலை கொடுத்து வாங்க முடியாது.

வேலைவாய்ப்புகள் இன்றி இந்தியா முன்னேற முடியாது. அனைத்து அரசு காலிப்பணியிடங்களையும் நிரப்புவோம் என்பது எங்கள் வாக்குறுதி. அதிக எண்ணிக்கையிலான வேலைகளை உருவாக்குவதன் மூலம் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களையும் புத்துயிர் பெறச் செய்வோம்.” என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT