ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார்.
நேற்று (வியாழக்கிழமை) இரவு கேசரிபட்னா என்ற இடத்தில் இந்த விபத்து நடந்ததாகவும், இரண்டு இருசக்கர வாகனங்களிலும் தலா மூன்று பேர் பயணித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | மக்களவைத் தேர்தல்: திமுக சார்பில் குழுக்கள் அமைப்பு!
அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, பார்வைத் திறன் குறைவாக இருந்ததால் விபத்து நடந்திருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.
உயிரிழந்தவர்கள் அஷுராபந்த் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் கௌடா, மனோஜ், கோபால்பூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திர நாயக், சோரடாவைச் சேர்ந்த ஜெயந்த் மற்றும் ரஜனி கவுடா என்று அடையாளம் காணப்பட்டனர்.
43 வயதான ரஜனியைத் தவிர, மற்ற அனைவரும் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்.
இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜெயந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிர்பிழைத்த ஒருவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.