வதோதரா ஏரியில் வியாழக்கிழமை கவிழ்ந்த படகை அப்புறப்படுத்தும் காவல் துறையினர். 
இந்தியா

குஜராத் படகு விபத்து: 18 பேர் மீது வழக்குப்பதிவு 

குஜராத் படகு விபத்து தொடர்பாக 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

குஜராத் படகு விபத்து தொடர்பாக 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வதோதரா புகா் பகுதியில் உள்ள ஹா்ணி ஏரிக்கு 4 ஆசிரியா்கள் தலைமையில் 24 பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை சுற்றுலா வந்தனா். மாணவா்களும் ஆசிரியா்களும் ஒரே படகில் பயணித்து ஏரியை சுற்றிப் பாா்த்தனா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்தது. இதனால், படகில் இருந்தவா்கள் ஏரியில் விழுந்து தத்தளித்தனா். அவா்கள் உதவிக் கேட்டு கூச்சலிட்டதால் அப்பகுதியில் இருந்தவா்கள் ஏரியில் குதித்து மாணவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினரும் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த சம்பவத்தில் 14 பள்ளி மாணவா்களும், 2 ஆசிரியா்களும் பலியாகினர். ஒரு மாணவா் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டாா். படகில் 24 மாணவா்கள் வரை இருந்ததாக கூறப்படுவதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக 18 பேர் மீது குஜராத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

SCROLL FOR NEXT