இந்தியா

ராமர் கோயில் திறப்புவிழா: இணைய பாதுகாப்புக்கு நிபுணர்கள் குழு அனுப்பிவைப்பு!

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவினை முன்னிட்டு இணைய பாதுகாப்புக்கு நிபுணர்கள் குழுவை அமைத்தது உள்துறை அமைச்சகம்.

DIN

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவினை முன்னிட்டு இணைய பாதுகாப்புக்கு உள்துறை அமைச்சகம் நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ஜன.22ம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழாவினையொட்டி இணைய அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்று கிடைத்த தகவல்களையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் இணைய பாதுகாப்புக்கான உயர்மட்ட நிபுணர் குழுவை அயோத்தி நகருக்கு அனுப்பியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், உளவுத்துறை மற்றும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த நிபுணர்கள் குழுவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகம் அயோத்தி கோயிலில் விஐபி நுழைவு மற்றும் சைபர் குற்றவாளிகளால் வாட்ஸப்பில் அனுப்பப்படும் "கைபேசி செயலிகள்" குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தி வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட 7,000 பேருக்கு மேல் கோயில் அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

நிபுணர்கள் குழு அயோத்தியில் இணைய பாதுகாப்பு மையத்தை அமைத்து, இணைய போக்குவரத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும், ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முன்னதாக சைபர் குற்றவாளிகளின் ஒவ்வொரு செயலையும் கண்காணித்து தடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT