இந்தியா

எனக்கு எதிராக சதி: அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் ஜார்க்கண்ட் முதல்வர் பேட்டி

DIN

தனக்கு எதிராக சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர். சுமார் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். 

இதையொட்டி சனிக்கிழமை காலை முதலே முதல்வரின் இல்லம் மற்றும் அமலாக்கத்துறையின் வட்டார அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. விசாரணைக்குப் பிறகு தனது இல்லத்தின் முன் கூடியிருந்த ஆதரவாளர்களுக்கு மத்தியில் பேசிய அவர், எனக்கு எதிராக ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 

ஆனால் சதிகாரர்களின் சவப்பெட்டியில் இறுதி ஆணி எங்களால் போடப்படும். நாங்கள் பயப்பட மாட்டோம், உங்கள் தலைவர் முதலில் தோட்டாக்களை எதிர்கொண்டு உங்கள் மன உறுதியை உயர்த்துவார். உங்களின் இடைவிடாத ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஹேமந்த் சோரன் ஒவ்வொரு கட்சித் தொண்டனுக்கும் பின்னால் நிற்பார். இவ்வாறு அவர் கூறினார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும் முதல்வருமான ஹேமந்த் சோரன் இதற்கு முன்னதாக அமலாக்கத்துறை அனுப்பிய 7 சம்மன்களை புறக்கணித்திருந்தார். இந்நிலையில் எட்டாவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதையடுத்து அவர் இன்று விசாரணைக்கு ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் ராஷ்மிகா?

சென்னையிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்: நாசா

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: திருவள்ளூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம்?

திருச்சியில் 95.23% தேர்ச்சி: மாநில அளவில் 5ம் இடம்!

இலங்கையில் திவ்யபாரதி..!

SCROLL FOR NEXT