இந்தியா

ராமர் பிரதிஷ்டையை முன்னிட்டு தில்லியில் இறைச்சிக் கடைகளை அடைக்க வலியுறுத்தல்!

DIN

ஜனவரி 22ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வை முன்னிட்டு தில்லியில் உள்ள இறைச்சிக் கடைகளை அடைக்குமாறு, தில்லி இறைச்சி விற்பனையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் இர்ஷத் குரேஷி வலியுறுத்தி உள்ளார்.

இரு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவதாக சனிக்கிழமை அவர் கூறினார். 

அயோத்தியில் நடைபெறும் ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் கலந்துகொள்ளும் மக்களின் உணர்வுகளை மதித்து, அன்று ஒருநாள் மட்டும் இறைச்சி மற்றும் மீன் விற்கும் விற்பனையாளர்கள் தங்கள் வியாபாரத்தை நிறுத்தி வைக்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

ஒருநாள் கடையை மூடுவதால் நமது வியாபாரம் பெரிதாக பாதிக்கப்படாது.  ஜன.22ம் தேதி நமது ஹிந்து சகோதர, சகோதரிகளின் கொண்டாட்டத்தை மதிக்கும் விதமாக இதனை நாம் செய்யவேண்டும் என்று கூறினார்.

மேலும் தில்லியின் கன்னாட் பகுதியில் உள்ள பல உணவகங்கள் ஏற்கனவே ஜன.22ம் தேதி அசைவ உணவு பரிமாறப்படாது என்று அறிவித்துள்ளன என்று புதுதில்லி வியாபாரிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் அமித் குப்தா கூறினார். 

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வு ஜன.22ம் தேதி நடைபெற உள்ளது. இதில் நமது பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய விஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை!

கடவுளின் கைகளை படம்பிடித்த தொலைநோக்கி!

மாணவி ஸ்ரீமதி மரணம்: விசாரணைக்கு பள்ளி தாளாளர் உள்பட மூவர் ஆஜர்

டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு

SCROLL FOR NEXT