தில்லி அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை! 
இந்தியா

ராமர் பிரதிஷ்டை: தில்லி அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை!

தில்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

DIN

அயோத்தியில் கட்டப்பட்டுள் ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி நடைபெறும் சிலை பிரதிஷ்டை நாளில், தில்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் ஆன்மிக உணர்வு மற்றும் அவர்களின் கோரிக்கைகள் காரணமாக, ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டையை முன்னிட்டு ஜனவரி 22-ம் தேதி மதியம் 2.30 மணி வரை அரை நாள் விடுமுறை விடப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. 

குஜராத், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது தில்லிக்கும் அறிவித்துள்ளது. 

முன்னதாக, ஜனவரி 22ஆம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் அரை நாள் விடுமுறை என மத்திய அரசு ஜன.18ல் அறிவித்திருந்தது. 

ராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

SCROLL FOR NEXT