முகப்பு
இந்தியா

விமான விபத்து: விமானப் போக்குவரத்து அமைச்சகம் மறுப்பு

ஆப்கனில் இந்திய விமானம் விபத்துக்குள்ளானதாக வெளியான தகவலுக்கு இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:16 PM
கோப்புப் படம்.
பகிர்:

ஆப்கனில் இந்திய விமானம் விபத்துக்குள்ளானதாக வெளியான தகவலுக்கு இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

ஆப்கனின் ஜிபாக் மாவட்டத்தில் உள்ள மலை மீது மோதி இந்திய பயணிகள் விமானம் நொறுங்கியதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலுக்கு இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

அதேசமயம் ஆப்கன் விபத்தில் மொராக்கோவில் பதிவு செய்யப்பட்ட டிஎஃப் 10 ரக விமானம் சிக்கியிருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ஆப்கனில் இந்திய விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியான நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.