ராமர், சீதை.. நேற்று பிறந்த குழந்தைகளின் பெயர்கள்! 
இந்தியா

ராமர், சீதை.. நேற்று பிறந்த குழந்தைகளின் பெயர்கள்!

ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளில் ஒடிசாவில் பிறந்த குழந்தைகளுக்கு ராமர், சீதா என்று பெயரிட்டனர். 

DIN

ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளில் ஒடிசாவில் பிறந்த குழந்தைகளுக்கு ராமர், சீதா என்று பெயரிட்டனர். 

ஜனவரி 22 அன்று கேந்திரபாரா, ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு சார்ந்த மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் ஆண், பெண் என மொத்தம் 6 குழந்தைகள் பிறந்துள்ளது. ஆண் குழந்தைகளுக்கு ராமர் மற்றும் தேவி சீதா எனப் பெயர் சூட்டியுள்ளனர். 

ஒடிசாவில் பிறந்த குழந்தைக்கு 21 நாள் கழித்தே பெயர் சூட்டுவது வழக்கம் என்றாலும், ஸ்ரீபால ராமரின் பிராணப் பிரதிஷ்டை தினத்தில் பிறந்ததால் பெற்றோர்கள் அன்றே சீதா ராமர் எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர். 

ஸனாதன தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அனைவருக்கும் இது ஒரு முக்கியமான நாள். 

கேந்திபாராவைச் சேர்ந்த பிரியங்கா மல்லிக்(24) என்பவருக்கு ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறிது நேரத்திலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

எங்கள் வீட்டிற்கு வந்த புது வரவால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் மகளுக்கு சீதா என்று பெயரிட முடிவு செய்துள்ளதாக பிறந்த குழந்தையின் தந்தை நாராயண் கூறினார். 

அன்றைய தினம் குழந்தை பிறந்ததால் பல பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

SCROLL FOR NEXT