இந்தியா

நாளை வரை ஆறு மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

கடும் பனிமூட்டம் காரணமாக பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

DIN

கடும் பனிமூட்டம் காரணமாக பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
 
கடும் பனி மூட்டம் காரணமாக வட மாநிலங்களில் ரயில் , விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
 
நாட்டில், பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், உத்தர பிரதேசம், பிகார், ராஜஸ்தான் ஆகிய ஆறு மாநிலங்களிலும் ஜனவரி 28ஆம் தேதி வரை கடும் பனிமூட்டம் நிலவும் என்பதால்  சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹிமாலயப் பகுதிகளில் ஜனவரி 30 வரை லேசான மழை அல்லது பனிமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

நாளை வரை வட இந்திய மாநிலங்களில் கடுங்குளிர் நிலவும் என்றும், அதன்பிறகு மெல்ல குளிரின் அளவு குறையத் தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடுங்குளிருக்கு இடையே, புது தில்லியில் காற்றின் தரம் மோசமாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

ரூ.19,000 கோடி நிதியை நிறுத்திய டிரம்ப் உத்தரவு ரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆஹா... கலக்கலா இருக்கே சாய்! கேட்க கேட்க பிடிக்கும் ஊறும் பிளட்!

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? முன்னணியில் தேவேந்திர ஃபட்னவீஸ்?!

SCROLL FOR NEXT