இந்தியா

அம்பேத்கர் படம் பொறித்த கொடியை அவமதித்த மூவர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் படம் பொறித்த கொடியை அவமதித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

DIN

உத்தரப்பிரதேசத்தில் பல்லியா பகுதியில் அம்பேத்கர் புகைப்படம் தாங்கிய கொடியை அவமதித்த 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

ரஸ்ரா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அம்பெத்கர் புகைப்படம் தாங்கிய கொடியை மூவர் அவமதிக்கும் காணொலி சமூக வலைதளத்தில் பரவிவந்தது. 

சனிக்கிழமை ராஸ்ரா பகுதியில் உள்ள பக்வாய்னார் கிராமத்தில் டாக்டர். அம்பேத்கர் உருவம் பொறித்த கொடியை சிலர் பிடுங்கி, காலால் மிதித்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று குற்றவாளிகளைக் கைது செய்துள்ளதாகவும் துணைக் காவல் கண்காணிப்பாளர் முகமது ஃபஹீம் குரேஷி தெரிவித்துள்ளார். குற்றவாளிகளின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மறைந்த பழங்குடியின ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது

குடியரசு தினம்: பாகிஸ்தான் - இந்தியா வா்த்தக கவுன்சில் வாழ்த்து! இணைந்து செயல்பட விருப்பம்

வளா்ந்த பாரதத்துக்கு மகளிா் பங்களிப்பு முக்கியம்: குடியரசுத் தலைவா் உரை

SCROLL FOR NEXT