ராகுல் காந்தி (கோப்புப்படம்) 
இந்தியா

பாஜக அரசு வெறுப்பை மட்டுமே பரப்பி வருகிறது: ராகுல் காந்தி

மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடு முழுவதும் வெறுப்பை மட்டுமே பரப்பி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

DIN

மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடு முழுவதும் வெறுப்பு மற்றும் வன்முறையை மட்டுமே பரப்பி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் சிலிகுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் பேசிய ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார். 

அவர் பேசியதாவது, “குறுகிய கால ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிவீர் திட்டத்தை அறிமுகப்படுத்தி, ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு தொண்டாற்ற விரும்பிய இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு சிதைத்துள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடு முழுவதும் வெறுப்பையும், வன்முறையையும் மட்டுமே பரப்பி வருகிறது. அதனால் எந்தப் பயனும் இல்லை. வெறுப்பைப் பரப்புவதற்குப் பதிலாக, நம் இளைஞர்களுக்கு அன்பையும், நீதியையும் பரப்புவதற்குதான் நாம் உழைக்க வேண்டும்.

ஏழை மக்கள் மற்றும் இளைஞர்களுக்காக செயல்படுவதற்கு மாறாக, மத்திய பாஜக அரசு ஒருசில பெருநிறுவனங்களின் நலனுக்காக மட்டுமே செயல்பட்டு வருகிறது." என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT