இந்தியா

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சிப் பாதை

தற்போதைய தொழில்சந்தைப் போக்கு எவ்வாறு உள்ளது என்பது குறித்து கல்விச் சிந்தனை அரங்கில் விவாதிக்கப்பட்டது.

DIN


தற்போதைய தொழில்சந்தைப் போக்கு எவ்வாறு உள்ளது என்பது குறித்து கல்விச் சிந்தனை அரங்கில் விவாதிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெற்றது.

கல்விச் சிந்தனை அரங்கில் பேசிய ஐஐடிஎம் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி எம்.ஜே. சங்கர் ராமன் மற்றும்  கேரள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சஜி கோபிநாத் ஆகியோர் தற்போதைய சூழ்நிலையில் இருக்கும் தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்துப் பேசினர்.

இரண்டு நாள் மாநாட்டின் முதல் நாளில், "கல்வியை உயர்வாக எடுத்துக்கொள்வது" என்ற தலைப்பில் நடந்த குழு விவாதத்தின் போது, ​​தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு இருக்கும் பரந்த வாய்ப்புகளை சங்கர் ராமன் சுட்டிக்காட்டினார். இருந்தாலும், மாணவர்களிடையே, தொழில் முனைவோர் ஆவதற்கு இருக்கும் தயக்கம் மற்றும் அதில் இருக்கும் ஆபத்துக்கள் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.


சஜி கோபிநாத் கூறுகையில், "வளர்ந்து வரும் சூழலுக்கு ஏற்ப  திறனை வளர்த்தல் மற்றும் வாய்ப்புகளை பெறுவதில் கிடைக்கும் வாய்ப்புகளை உகந்த முறையில் மாணவர்கள் பெறுவதற்கு ஏற்ற வகையில் கல்வி நிறுவனங்கள் கட்டமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை இரு பேச்சாளர்களும் வலியுறுத்தினர்.

“அடுத்த கூகுள் போன்ற ஒரு தோற்றம் இந்தியாவில் உள்ள ஒரு சிறிய குழு மாணவர்களின் முயற்சியை மட்டுமே நம்பியதாக இருக்க முடியாது; அத்தகைய முயற்சிகளை வளர்ப்பதற்கு ஒரு வலுவான ஆதரவு அமைப்பும் இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

கஃபுள் பிரண்ட்லி அசத்தல் வசூல்!

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

திருமண கொண்டாட்டத்தில் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா!

SCROLL FOR NEXT