இந்தியா

சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீனுக்கு எதிரான ஆந்திர மாநில அரசின் மனு தள்ளுபடி!

சந்திரபாபு நாயுடுவின் முன் ஜாமீனுக்கு எதிராக தொடரப்பட்ட ஆந்திர மாநில அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

DIN

சந்திரபாபு நாயுடுவின் முன் ஜாமீனுக்கு எதிராக தொடரப்பட்ட ஆந்திர மாநில அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அமராவதி சாலை ஊழல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை எதிர்த்து ஆந்திர அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

ஜனவரி 10ம் தேதி சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து ஆந்திர மாநில அரசு தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு ஏற்கனவே நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே முந்தைய உத்தரவைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்க உச்ச நீதிமன்ற அமர்வு விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.

சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தபோது பல நிறுவனங்களுக்கு பலனளிப்பதற்காக அமராவதி தலைநகர் மாஸ்டர் பிளான், உள்வட்ட சுற்றுச் சாலை போன்ற திட்டங்களில் முறைகேடு செய்ததாக கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

மேட்டூர் அணை நிலவரம்!

சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

SCROLL FOR NEXT