முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் நக்சல்களுடனான சண்டையில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் நக்சல்களுடனான சண்டையில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 10:32 PM
கோப்புப்படம்
பகிர்:

ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் நக்சல்களுடனான சண்டையில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீரமரணம் அடைந்த வீரர்களில் இருவர், மத்திய ரிசர்வ் காவல் படையின் அங்கமான கோப்ரா பிரிவு கமாண்டோ படையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சத்தீஸ்கரின் சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று(ஜன.30) அப்பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினரை நோக்கி நக்சலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சண்டையில் 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாகாவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.   

Advertisement

உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.