தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு 5-வது முறையாக அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் பாஜக, அரவிந்த கேஜரிவாலை விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தியுள்ளது.
தில்லி பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா, “அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராவதே தில்லி முதல்வருக்கு நாங்கள் வலியுறுத்துவது. அரசியலமைப்பு பதவியில் இருப்பவர் அரவிந்த் கேஜரிவால். ஆம் ஆத்மி சென்ற முறை செய்தது போல விசாரணை தேதியில் அவருக்கு வேறு ஏதேனும் பயணத்திட்டம் உருவாக்குகிறார்களா எனப் பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
தில்லி மதுபான ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு கடந்த நான்கு மாதங்களில் அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியுள்ளது. முந்தைய 4 சம்மன்களை தில்லி முதல்வர் தவிர்த்தார்.
இதையும் படிக்க: ஞானவாபி மசூதி: ஹிந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி!
ஜன.13 அன்று நான்காவது சம்மன் ஜன.18-ம் தேதி ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்டது. அந்த தேதிகளில் தில்லி முதல்வர் கோவாவுக்கு மூன்று நாள் பயணம் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.