இந்தியா

புதிய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றும் குடியரசுத் தலைவர்!

DIN

புதுதில்லி: நாடாளுமன்றத்தில் புதிய கட்டடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு முதல்முறையாக இன்னும் சற்று நேரத்தில் உரையாற்றவுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் இன்று(ஜன. 31) காலை தொடங்கவுள்ளது. தற்போதைய 17-ஆவது மக்களவையின் கடைசி நாடாளுமன்றக் கூட்டம் இதுவாகும்.

அதேநேரம், நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றவிருக்கிறாா்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் அலுவல்கள் தொடங்கப்பட்ட நிலையில், முதல்முறையாக குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளார்.

அவரது உரையில், கடந்த 10 ஆண்டு கால பாஜக அரசின் சாதனைகள் முன்வைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், நாளை காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் புதிய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நயன்தாராவின் ‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு நிறைவு!

6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

ஹிந்துக்களின் மக்கள்தொகை சரிவுக்கு காங்கிரஸ் தான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

பாகிஸ்தான் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 7 பேர் பலி!

கொளுத்தும் வெயிலா? பொழியும் மழையா? தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT