இந்தியா

இந்தியா கூட்டணியிலிருந்து விலகியது ஏன்? நிதிஷ் குமார் விளக்கம்

தொகுதிப் பங்கீடு சிக்கல்தான் இந்தியா கூட்டணியிலிருந்து விலகியதற்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார். 

DIN

இந்தியா கூட்டணியில் என் பேச்சை நிராகரித்தன் காரணமாகவே மீண்டும் பழைய இடத்துக்கே வந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த பிகாா் முதல்வா் நிதிஷ் குமாா், அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளார். 

கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணம் என்ன? என பலரும் விவாதித்து வந்த நிலையில், பிகார் முதல்வர் நிதிஷ் குமார் முதல்முறையாக மனம் திறந்துள்ளார். 

செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

தொகுதிப் பங்கீடு சிக்கல்தான் இந்தியா கூட்டணியிலிருந்து விலகியதற்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வேறு பெயரை தேர்வு செய்ய வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் அந்த பெயரைத் தான் முடிவு செய்தனர். இந்தியா கூட்டணியில் என் பேச்சை நிராகரித்தனர். 

எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை அவர்கள் இதுவரை முடிவு செய்யவில்லை. இதுபோன்ற சில முரண்பாடுகள் ஏற்பட்டதால் நான் கூட்டணியிலிருந்து வெளியேறினேன்.  

பிகார் மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

வைகை அணையில் 69 அடியில் தண்ணீா் நிலைநிறுத்தம்

ரோல்பால் போட்டியில் சாம்பியன்: திண்டுக்கல் அணிக்கு பாராட்டு விழா

இலக்கு மட்டும்... சிம்ரன் சௌத்ரி

மாடர்ன் புறா... பிரியங்கா ஜவல்கர்

SCROLL FOR NEXT