இந்தியா

மணமான 8 மாதங்களில் பலி: வரதட்சிணை கொடுமை காரணமா?

கணவரின் பெற்றோர் வீட்டில் மனைவி தற்கொலை செய்து இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

கோரக்பூர்: 27 வயதான பெண் மாமனார், மாமியார் வீட்டில் தற்கொலை செய்துள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் சேம்பியர்கஞ்ச் பகுதியில் ஜோதி தேவி என்கிற பெண் வீட்டின் கூரையில் தூக்கிட்டு இறந்ததாக அந்த பகுதி காவல் நிலைய அதிகாரி ராஜ்குமார் அரூரா தெரிவித்துள்ளார்.

மனிஷ் என்பவருடன் எட்டு மாதங்களுக்கு முன்பு ஜோதி தேவிக்கு திருமணம் நடந்துள்ளது. கணவர், மாமனார் மற்றும் மாமியார் தொடர்ந்து வரதட்சிணை கேட்டு ஜோதி தேவியைத் துன்புறுத்தியதாகவும் அதனால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பார் எனச் சந்தேகிப்பதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விளையாடித்தான் பாா்ப்போமே...

காரைக்காலில் கல்லறைத் திருநாள்

சமன்செய்து சீா்தூக்கும் கோல்!

கடத்தல் வழக்கில் இருவா் கைது

பிகார் தேர்தல்! காங்கிரஸை மிரட்டி முதல்வா் வேட்பாளரானாா் தேஜஸ்வி: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT