இளைஞர்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்பதற்காக அரசே வினாத்தாளை கசியவிடுகிறது என்று மக்களவையில் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுள்ள சமாஜவாதி தலைவரும் அக்கட்சியின் மக்களவைக்குழுத் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
”மக்களவைத் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு தார்மீக வெற்றியாகும். இந்தியா கூட்டணிக்கான பொறுப்பை மக்கள் காட்டியுள்ளனர். இந்த தேர்தல் மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன.
வினாத்தாள் ஏன் கசிகிறது? உண்மை என்னவென்றால் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க அரசு தயாராக இல்லாததால், அரசே வினாத்தாளை கசியவிடுகிறது.
இவிஎம் இயந்திரங்கள் மீது நேற்றும் எனக்கு நம்பிக்கை இல்லை, இன்றும் இல்லை. ஏன் நாங்கள் 80-க்கு 80 தொகுதிகளில் வென்றாலும் நம்பிக்கை வராது. இவிஎம் இயந்திரம் குறித்த பிரச்னை முடிந்துவிடவில்லை.
அயோத்தி வெற்றி, இந்திய ஜனநாயகத்தின் வாக்காளர்களின் வெற்றியாகும்.
நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். அக்னிவீர் திட்டத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.