இந்தியா

கர்நாடகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்!

கர்நாடகத்தில் டெங்கு பரவல் 42% அதிகரிப்பு: விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரம்

DIN

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 42 சதவிகிதம் டெங்கு பரவல் கர்நாடகத்தில் அதிகரித்துள்ளதாக அந்த மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பெங்களூருவில் மக்களை வீடு வீடாக சென்று சந்திக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனவரி மாதம் முதல் 6 பேர் டெங்குவினால் பலியானதாகவும் 6,187 டெங்கு தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, சிக்கமங்களூரு, மைசூரு, ஹவேரி, சித்ரதுர்கா, சிவமோகா மற்றும் தக்‌ஷினா கன்னடா ஆகிய மாவட்டங்களில் டெங்கு பதிவாகியுள்ளது.

சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ்

இது குறித்து, தனியார் மருத்துவனைகளில் சோதனைக்கு நிலையான விலை நிர்ணயிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள். ஆரம்ப கட்டத்திலேயே டெங்கு கண்டறியப்பட்டல் இறப்புகள் தவிர்க்கப்படும். அதிகாரிகள் கண்காணிப்புடன் செயலாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்கள் பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு மருத்துவ சோதனை செய்யுமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசு வெள்ளிக்கிழமை முதல் டெங்கு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பலியானோருக்கு பேரவையில் அஞ்சலி!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது!

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்! ரூ. 95 ஆயிரத்தை நெருங்கியது! வெள்ளி விலை ரூ. 206

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக வாழ்வார்கள்! டிரம்ப்

காந்தாரா சாப்டர் 1 வசூல் வேட்டை! 11 நாள்கள் விவரம்...

SCROLL FOR NEXT