ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல் குறித்து...
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியின் கேப்டன் பராஸ் டோக்ராவும் கர்நாடக அணியின் அனீஷும் தலையால் மோதிக்கொண்டது சர்ச்சையானது.
ஜம்மு காஷ்மீர் அணி இரண்டாம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 527 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருக்கிறது.
இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்
Advertisement
Advertisement
ஜம்மு காஷ்மீர் அணியின் கேப்டன் பராஸ் டோக்ரா (41 வயது) முதல் நாளில் கை விரலில் அடிப்பட்டதால் ரிடையர்ட் அர்டு முறையில் வெளியேறினார்.
பின்னர், இரண்டாம் நாளில் பேட்டிங் ஆட வந்தவர் சிறப்பாக விளையாடி 166 பந்துகளில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் அவருக்கு பவுன்சர் பந்துகள் வீசப்பட்டன. ஒரு பந்து அவரது தலையில் பலமாக அடித்து ஸ்டம்பில் பட்டது. இருந்தும் நல்வாய்ப்பாக பெயில் கீழே விழாததால் தப்பித்தார்.
கர்நாடக அணியின் சப்ஸ்ட்யூட் ஃபீல்டர் கே.வி. அனீஷ் தொடர்ச்சியாக அவரை வம்பிழுத்ததாகக் கூறப்படுகிறது. சரியாக 101ஆவது ஓவரில் பராஸ் டோக்ரா கோபமடைந்து அனீஷுக்கு அருகில் சென்று ஹெல்மெட்டால் லேசாக மோதுவார்.
50 சதவிகிதம் அபராதம்?
இருவரும் ஆவேசமாக வார்த்தை மோதலில் ஈடுபட கர்நாடக வீரர் மயங்க் அகர்வால் குறுக்கிட்டுப் பேசினார்.
அணியின் கேப்டன் தேவ்தத் படிக்கல் நடுவரிடம் புகார் அளித்தார். அடுத்த ஓவரிலே ஜம்மு காஷ்மீர் அணியின் கேப்டன் இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
மன்னிப்பை ஏற்க முடியாதென கே.எல்.ராகுல் கூறியுள்ளார். தற்போதைய தகவலின்படி ஜம்மு காஷ்மீர் அணியின் கேப்டனுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பராஸ் டோக்ரா உள்ளூர் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த ஒரு லெஜண்டாக இருக்கிறார். 41 வயதில் விளையாடும் பராஸ் டோக்ரா கோபம் அடையும் அளவுக்கு அனீஷ் என்ன கூறினார் என்று சரியாகத் தெரியாத நிலையில், அவரது செயல்பாடும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
Skipper Paras Dogra made a gutsy 70 but his intentional head-butting of Karnataka substitute KV Aneesh overshadowed an otherwise solid batting performance from Jammu and Kashmir, who reached 527 for 6 at stumps on the second day of the Ranji Trophy final.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.