இறுதிப் போட்டியில் இசை நிகழ்ச்சி: மடோனா, பிடிஎஸ், ஷகீரா உடன் இணையும் ஜஸ்டீன் பைபர்!
கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் இடைவேளையில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி குறித்து...
கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் ஹாஃப் டைம் இடைவேளையில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சியில் மடோனா, பிடிஎஸ், ஷகீரா உடன் பிரபல பாப் பாடகர் ஜஸ்டீன் பைபரும் இணைந்துள்ளார். இதில் புர்னா பாய், ஆண்ட்ரியா போசெல்லி, ஜே பால்வின், கேட்டி பெர்ரி, லிசா, அனிட்டா மற்றும் ரேமா ஆகியோரும் பாடவிருக்கிறார்கள்.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் கடந்த ஜூன் 11ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைப் போட்டிகள் காலிறுதிச் சுற்றுவரை நடைபெற்றுள்ளன. இதில் 8 அணிகள் தேர்வாகியுள்ளன.
இறுதிப் போட்டி அமெரிக்காவில் நியூயார்க், நியூஜெர்ஸி திடலில் ஜூலை 20 இந்திய நேரப்படி இரவு 12.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. முதல் பாதிக்குப் பிறகு விடப்படும் 11 நிமிஷ ஹாஃப்டைம் இடைவேளையில் இசை நிகழ்ச்சி நடத்தப்படவிருக்கிறது.
Advertisement
Advertisement
இந்த இசை நிகழ்ச்சியை கிறிஸ் மார்டின் நடத்துகிறார். இதன்மூலம் கிடைக்கும் நிதி ஃபிஃபாவின் குளோபல் சிட்டிசன் கல்வி அறக்கட்டளைக்குத் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்பந்தின் மிகப்பெரிய மேடையில் இசையையும் பங்கேற்க செய்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சில ரசிகர்கள் போட்டியின் தீவிரமான மனநிலையை சிதைப்பதாக இருக்குமெனவும் சிலர் ஆறுதலாக இருக்குமெனவும் கூறி வருகிறார்கள்.
உலகம் முழுவதும் இருக்கும் குழந்தைகளுக்கு கல்வி, கால்பந்து மீதான உதவிகளுக்கு இந்தத் தொகை பயன்படும் என்பதால் மட்டுமே நடத்தப்படுவதாக ஃபிஃபா கூறியுள்ளது.
காலிறுதியில் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, மொராக்கோ, பெல்ஜியம், நார்வே, ஸ்விட்சர்லாந்து ஆகிய அணிகள் தேர்வாகியுள்ளன. போட்டியை நடத்தும் நாடுகள் காலிறுதிக்கு தேர்வாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
FIFA World Cup 2026 final halftime show lineup revealed: Justin Bieber, BTS, Madonna, Shakira to perform
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.