மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடியை பேச விடாமல் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்து மக்களவையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார்.
அவர் அவைக்கு வந்தவுடன் பாஜகவினர் மோடி.. மோடி.. என்று முழக்கமிட்ட நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் மோடிக்கு எதிராக முழக்கமிடத் தொடங்கினர்.
தொடர்ந்து, அமளிக்கு இடையே மோடி தனது உரையை தொடங்கிய நிலையிலும், எதிர்க்கட்சியினர் அமைதி காக்காமல் தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளை அவைத் தலைவர் ஓம் பிர்லா கடுமையாக கண்டித்தும் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மணிப்பூருக்கு நீதி வேண்டுமென்றும் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.